Madras High Court granted permission for RSS to hold processions at 128 locations inTamil Nadu source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்” : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு : நிபந்தனைகளை பின்பற்றவும் ஆணை!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

Kannan

அணிவகுப்பு ஊர்வலம் - அனுமதி கோரிய ஆர்எஸ்எஸ்

ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் நிறுவன தினத்தை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 128 இடங்​களில் அக்டோபர் 18, 25, நவம்பவர்1 ஆகிய நாட்​களில் ஏதேனும் ஒரு​நாளில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதிக்க கோரி ஆர்​எஸ்எஸ் அமைப்​பின் மாநிலச் செய​லா​ளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​து இருந்தார்.

ஆர்எஸ்எஸ் வாக்குறுதி

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ‘அக்​.25, நவ.1 ஆகிய தேதி​களில் அணிவகுப்பு நடத்த அனு​மதி வழங்​கப்​படும்’ என தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் வகுத்த விதி​முறை​கள் கடைபிடிக்​கப்​படும் என ஆர்​எஸ்​எஸ் தரப்​பிலும் உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்​டது.

அனுமதி கோரி ஒவ்வொரு ஆண்டும் வழக்கா?

இதைத்தொடர்ந்து நீதிப​தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒவ்​வொரு ஆண்​டும் ஆர்​எஸ்எஸ் சார்​பில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதி கோரி நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய சூழல் உள்​ளது. இனி​யும் அது​போன்ற சூழல் ஏற்படக் கூ​டாது.

போலீசார் உரிய அனுமதி வழங்க வேண்டும்

ஆர்​எஸ்​எஸ் அணிவகுப்பு ஊர்​வலம் மற்​றும் அதைத் தொடர்ந்து நடத்​தப்​படும் பொதுக்​கூட்​டங்​களுக்கு போலீ​ஸார் அக்​.19-க்​குள் அனு​மதி வழங்க வேண்​டும். அதே​போல, உயர் நீதி​மன்​றம் விதித்​துள்ள நிபந்​தனை​களை ஆர்​எஸ்​எஸ் கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் என்று, உத்தரவிட்டார்.

ஆர்எஸ்எஸ் வழக்கு கடந்து வந்த பாதை

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி மறுத்து கடந்த 2023-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை பின்னர், உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்த ஆண்டு 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

================