Madras HC Formed SIT Under Asra Garg IPS on Karur Stampede : கரூரில் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை :
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக நடத்த வழிகாட்டு நெறிமுகளை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுக்கு, விஜய் தரப்புக்கும் நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு :
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் (Asra Garg) தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் காவல்துறை இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
தமிழக காவல்துறைக்கு கேள்வி
விஜயின் வாகன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காயம் அடைந்தது குறித்து தமிழக அரசு தெரிவித்த போது, விஜயின் வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்? வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? புகார் அளிக்கவில்லை என்றாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
விஜய்க்கு தலைமை பண்பு இல்லை
கரூர் நிகழ்ச்சியில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் உள்ளிட்டோரை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தவெக தலைவர் வெளியேறி இருக்கிறார். இதன்மூலம் அவருக்கு ( விஜய் ) தலைவருக்கு தலைமைப் பண்பே இல்லை என நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
தவெகவிற்கு கடும் கண்டனம்
தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதி, "இது என்ன விதமான கட்சி? சம்பவம் நடந்த பிறகு எந்த அக்கறையும் இல்லாமல், அந்தக் கட்சியினர் அனைவரும் உடனே அங்கிருந்து சென்றுள்ளனர். அவர்கள் அங்கேயே இருந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அந்தக் கட்சிக்கு நோட்டீஸ் பிறப்பிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். அரசியல் கட்சிகளின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது என்றும் நீதிபதி கூறினார்.
மேலும் படிக்க : Karur Stampede Death : விஜய், தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை
தவெகவின் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசு இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று வினவிய போது, ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டது. அந்தப் பதிவை பார்வையிட்ட நீதிபதி, “ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இவர் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
=============