Madras High Court orders a ban on measures to control stray dogs in areas surrounding educational institutions.  google
தமிழ்நாடு

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை பகுதிகளில் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக அறிக்க வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Rohini

தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் ; உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக அறிக்க வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது

தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறிப்பாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நான்கு மாத காலத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளதாகவும், 17 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன எனச் சுட்டிக்காட்டி , அறிக்கை வெளியிட உத்தரவிட்டுள்ளது

நாய்களை பாரமரிப்பு இடங்களில் விட உத்தரவு

இது குறித்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம், போதுமான தடுப்பூசி

அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும், மேலும் தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது

பள்ளி கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்கவும் வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

=======================