தமிழ்நாடு

எப்படி இருக்கும் மதுரை எய்ம்ஸ்? முப்பரிமாண வீடியோ வெளியீடு

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவனையின் முப்பரிமாண வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

MTM

எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் எக்ஸ் தளத்தில் (https://x.com/madurai_aiims ) வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், எதிர்கால சுகாதாரத்தின் சுடரொளியான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட வடிவமைப்பை பெருமையுடன் வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளி, உலகத் தரத்திலான மருத்துவ வசதிகளுடன் கூடிய அதிநவீன மருத்துவ வளாகத்தின் ஒரு பார்வையை வழங்குகிறது என்றும், கோடிக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை வழங்க இருக்கும் இந்த மருத்துவ மையம், அனைவருக்கும் அணுகக்கூடிய சுகாதார சேவைகள் வழங்குவதுடன் மேம்படுத்ததப்பட்ட உள்கட்டமைப்புடன் சிறந்த மருத்துவ பராமரிப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று வீடியோ வெளியிட்டு எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

------------------------------