Madurai AIIMS medical college is expected to open in August AI generated
தமிழ்நாடு

Madurai AIIMS: எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டில் திறப்பு? : ரூ.2,000 கோடி பிரமாண்டம், மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டு மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Kannan

ரு..2,000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை தோப்பூரில் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில், ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான செலவில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் இந்த பிரம்மாண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டு மே 22ம் தேதி எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கின.

90% பணிகள் நிறைவு

தற்போது, மாணவர்களுக்கான வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் மற்றும் விடுதி கட்டிடங்கள் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் 90% நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.

24 தனித்தனி கட்டிடங்கள்

33 மாதங்களுக்குள் ஒட்டுமொத்த கட்டுமானத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது அதாவது 2027ம் ஆண்டு பிப்ரவரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில், 24 தனித்தனி கட்டிடங்கள் அமையவுள்ளன.

முதற்கட்ட பணிகள் நிறைவு

முதற்கட்ட பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

உலகளாவில் தரநிலைக்கு இணையாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

900 படுக்கைகளுடன் மருத்துவமனை

இந்த வளாகத்தில் 900 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மாணவ-மாணவியர் விடுதிகள், குடியிருப்பு வளாகங்கள்...

விளையாட்டுத் திடல் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட அரங்கம் ஆகிய வசதிகள் மதுரை எய்ம்சில் இடம்பெறுகின்றன.

நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வந்த 4ம் ஆண்டு மாணவர்கள், மதுரை தோப்பூர் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்று அனுமதிக்கப்பட்டனர்.

தென் தமிழக மக்களுக்கு உயரிய மருத்துவம்

அடுத்த மாதம் இந்த கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் திறக்கப்பட்டால், தென் தமிழக மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைப்பதுடன், மருத்துவ மாணவர்களின் கல்வித் தரமும் உயரும் என்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவிற்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கிறது.

=============