Madurai Railway Station to Have a Deepam Pillar? Ashwini Vaishnaw's Remark Sparks Buzz Ai Genrated
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடும் கண்டனம்!

மறுசீரமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் நிலையத்தின் வடிவமைப்பை குறிப்பிட்டு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது...

NARENDRAN K

தீபம் ஏற்றுவதைத் தடுத்த தமிழக அரசு: அஸ்வினி வைஷ்ணவ் விமர்சனம் :

சென்னையில் நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுத்ததன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் மனதை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், ஒரு தீபத்தை ஏற்றுவதை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் தமிழக மக்களின் வளர்ச்சியையும் அவர்களின் நம்பிக்கையையும் தடுத்துவிட முடியாது என்று தெரிவித்தார்.

மதுரை ரயில் நிலையத்திலும் தீபம் ஏற்றுவோம்:

தொடர்ந்து, மறுசீரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தின் புதிய கட்டமைப்பைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பைப் பாருங்கள்.

அங்கேயே நாம் தீபம் ஏற்றலாம் என்று நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

அவ்வாறு தீபம் ஏற்றினால் தமிழக அரசு தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு வந்து அதை அணைக்குமா என்றும் நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், தீபம் ஏற்றுவதைத் தடுப்பது நமது கலாச்சாரத்தையும் நம்பிக்கையையும் தடுப்பதற்கு இணையானது எனவும் விமர்சித்தார்.

தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை :

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு மாநில அரசு தேவையான நிலங்களை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் : அஸ்வினி வைஷ்ணவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் :

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தமிழக அரசு தடுத்தது லட்சக்கணக்கான மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக விமர்சித்தார்.

மேலும், மதுரை ரயில் நிலையம் புதிதாக மறுசீரமைக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு தீபத்தூண் அமைக்கப்படுவது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

===================