ttv dinakrran
தமிழ்நாடு

மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு : திமுகவின் விஞ்ஞான ஊழல்

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள வரி முறைகேடுகள், திமுகவின் விஞ்ஞான ஊழலை நினைவுப்படுத்துவதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.

Kannan

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரி குறைப்பு முறைகேடு வாயிலாக, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட எட்டு பேர் கைதாகி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு, மூன்று ஆண்டுகளாக சட்ட விரோதமாக வரி குறைப்பு செய்ததில், அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வரி விதிப்புக்கு அனுமதி அளிக்கும் மாநகராட்சி அதிகாரிகளின், 'கடவுச் சொற்கள்' முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வழியே மட்டுமே வரி விதிப்பு நடக்கும் சூழ்நிலையில், இந்த முறைகேடானது, திமுகவின் அடிப்படை குணமான, விஞ்ஞான ஊழலை மீண்டும் நினைவுபடுத்துகிறது.

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேட்டில் கைதானவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி, தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்.

மற்ற மாநகராட்சிகளிலும் இது போன்ற முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை, தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

====