Maha Shivaratri 2026 Special Bus Announcement From Chennai Kilambakkam Bus Terminus To Various City Include Tiruvannamalai Source : TNSTC
தமிழ்நாடு

மகாசிவராத்திரிக்காக சிறப்பு பேருந்துகள் : பயணிகள் மகிழ்ச்சி

Maha Shivaratri 2026 Special Bus in Chennai: மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை கிளாம்பாகத்தில் இருந்து, பல்வேறு ஊருகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baala Murugan

மகா சிவராத்திரி பேருந்து இயக்கம்

Maha Shivaratri 2026 Special Bus From Chennai : மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து 1240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்படும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதால் , முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

125 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 500 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுதினம் 550 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுதினம் 55 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

சொந்த ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்து

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு நாளை மற்றும் நாளைமறுதினம் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன,

மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுதினம் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக விரைவு போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.