மகா சிவராத்திரி விழா
On the occasion of Maha Shivaratri, Southern Railway has announced additional special trains from Chennai Egmore to Tiruvannamalai and Vellore சிவனுக்கு உகந்த மகா சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்பட்டுகிறது. இதற்காக சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகாசிவராத்திரிய் கொண்டாட செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
எழும்பூர் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்
அதன்படி, நாளை காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 3 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், காலை 9.15 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது.
எழும்பூர் - வேலூர் சிறப்பு ரயில்
இதேபோல், சென்னை எழும்பூர் - வேலூர் கண்டோன்மெண்ட் இடையே முன்பதிவில்லா மெமு (MEMU) சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 12 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு வேலூர் சென்றடையும். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில், காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
முன்பதிவில்லா ரயில்கள்
இதேபோன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு தினங்களும், விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், பக்தர்கள் சிரமமின்றி சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, திரும்பி வரலாம்.
==========