Makkal Needhi Maiyam said, not be able to refund the money to 60 people who paid 50,000 rupees  google
தமிழ்நாடு

”ரூ.50,000ஐ திருப்பி தர முடியாது” : 60 பேருக்கு கைவிரித்த மக்கள் நீதி மய்யம் : கட்சி நிதிக்கு சென்று விட்டதாக விளக்கம்!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்திய 60 பேருக்கு பணத்தை திருப்பி தர முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கைவிரித்து விட்டது.

Kannan

மக்கள் நீதி மய்யம்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 15 தொகுதிகளை போட்டியிட விருப்பம் தெரிவித்தது. தேர்​தலில் போட்​டி​யிட விரும்​பும் தொண்​டர்​கள் மற்​றும் நிர்​வாகி​களிடம் கட்சி சார்​பில் விருப்ப மனு கட்​ட​ணம் பெறப்​படு​வது வழக்​கம்.

விருப்ப கட்டணம் ரூ.50,000

அந்த வகை​யில், மக்​கள் நீதி மய்​யம் சார்​பில் விருப்ப மனு கட்​ட​ணம் ரூ.50 ஆயிரம் என நிர்​ண​யிக்​கப்​பட்​டது. தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​கும் என்று கருதி மநீம தொண்​டர்​கள், நிர்​வாகி​கள் 60 பேர் விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தி, மனுக்களை பெற்றுச் சென்றனர்.

2 தொகுதிகள் மட்டுமே - திமுக கறார்

இதனிடையே, திமுக குழுவினருடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 2 இடங்கள் மட்டுமே மநீம-க்கு தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தலை புறக்கணித்த மக்கள் நீதி மய்யம்

இதுபற்றி கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த, கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் உறுதியாக நின்றனர். இதனால், வேறுவழியின்றி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக தெரிவித்த கமல்ஹாசன், சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லாததால், தேர்தலில் களமிறங்கவில்லை என்பதையும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அதிர்ச்சி

தேர்​தலில் போட்​டி​யிடலாம் என்று ஆசையுடன் விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​திய கட்சி நிர்​வாகி​களும் தொண்​டர்​களும் அதிர்ச்சி அடைந்​தனர். இந்த சூழலில், மநீம தேர்​தலில் போட்​டி​யி​டாத​தால் விருப்ப மனு கட்​ட​ணத்தை திருப்​பித்தர வேண்​டும் என்று கட்​ட​ணத்தை செலுத்​திய நிர்​வாகி​கள் கோரிக்கை வைத்​துள்​ள​தாக செய்​தி​கள் வெளி​யா​யின.

50 ஆயிரத்தை தர முடியாது

இதுதொடர்​பாக மநீம நிர்​வாகி​கள் கூறுகையில், “விருப்ப மனு கட்​ட​ணம் என்​பது திருப்​பித்​ தரக்​கூடிய கட்​ட​ணம் அல்ல (Non--refundable) என்​பதும் அந்த கட்​ட​ணம் கட்சி நிதி​யாக கருதப்​படும் என்​பதும் அனை​வருக்​கும் நன்கு தெரி​யும்.

நிர்வாகிகள் பணம் கேட்கவில்லை

அந்த வகை​யில், தேர்​தலில் கட்சி சார்​பில் போட்​டி​யிட 60 பேர் விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தி​யிருந்​தனர். அந்த கட்​ட​ணம் கட்சி நிதிக்கு சென்​று​விட்​டது.

விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​திய எந்த தொண்​டரும், நிர்​வாகி​யும் அதை திரும்ப தரு​மாறு கட்சி தலை​மை​யிடம் எந்த கோரிக்​கை​யும் வைக்​க​வில்​லை.

ஆனால், எதிர்க்​கட்​சிகளைச்​ சேர்​ந்​தவர்​கள்​ திட்​ட​மிட்​டு இதுதொடர்​​பாக தவறான தகவல்​களை பரப்​பு​கிறார்​கள்​” என்​று விளக்​கம்​ அளித்​தனர்​.

======