மல்லை சத்யா - துரை வைகோ மோதல் :
Mallai Sathya Letter To MDMK Chief Vaiko : மதிமுகவில் மல்லை சத்யாவுக்கு துரை வைகோவிற்கும் இடையே வெடித்த மோதல், அக்கட்சியில் பூகம்பத்தை கிளப்பியது. மகனை எம்பியாக்கி, அழகு பார்த்த வைகோவால், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கடைசி வரை சமாதானதப்படுத்தவே முடியவில்லை. அவருக்கு துரோகி பட்டம் கட்டி, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
வைகோவிற்கு மல்லை சத்யா கடிதம் :
வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் மல்லை சத்யா. “வைகோ பொதுவெளியில் பேசியபோது ஏன் கண்டிக்கப்படவில்லை? பல முறை வைகோ தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினார். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீக்கத்திலும் குழப்புகிறார் வைகோ :
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன் மீது தற்காலிக நீக்கம் தொடர்பாக 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஆனால், தற்போது வழங்கும் அறிக்கைகளில் “தற்காலிக நீக்கம்” மற்றும் “பொறுப்புகளில் இருந்து நீக்கம்” என இரண்டு விதமான கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
பின்னணியில் துரை வைகோ :
“துரோகி” என குறிப்பிட்டு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததை நினைவுபடுத்தியுள்ளார். இதற்குப் பின்னால் துரை வைகோவின் நடவடிக்கைகள் உள்ளன. துரை வைகோ, பாஜகவில் இணைய விரும்புகிறார் என்பதையும் நான் தான் வெளிப்படுத்தினேன்.
32 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன் :
“மதிமுகவுக்காக நான் 32 ஆண்டுகளாக உழைத்தேன். பல வழக்குகளை எதிர்கொண்டேன். ஆனாலும், கட்சியை விட்டு விலகவோ, வேறு இடத்தில் ஆதரவைக் கேட்கவோ நான் போகவில்லை. ஆனால் இன்று, துரை வைகோவின் அரசியல் லாபத்திற்காக என் மீது பழி சுமத்தப்படுகிறது,”
மேலும் படிக்க : துரை வைகோவுக்கு ’மத்திய அமைச்சர்’ ஆசை : சீண்டும் மல்லை சத்யா
உழைப்பை வைகோ மறந்து விட்டார் :
நீண்டகால அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்துள்ள மல்லை சத்யா, கட்சியின் வளர்ச்சிக்காக செய்த உழைப்பையும் sacrifices-களையும் வைகோ மறந்து விட்டார். என்னை பழிக்குப் பலியாடாக காட்டி, துரை வைகோவின் எதிர்காலத்துக்காக பயன்படுத்துகின்றனர்” இவ்வாறு அந்தக் கடிதத்தில் மல்லை சத்யா குறிப்பிட்டு இருக்கிறார்.
மதிமுகவில் அதிர்வலைகள் :
மல்லை சத்யாவின் குற்றச்சாட்டுகள் மதிமுக உள்கட்டமைப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வைகோ தலைமையிலான மதிமுகவில் நீண்ட காலமாக நிலவி வரும் தலைமுறைப் போட்டியும், துரை வைகோவின் பங்கு குறித்த கேள்விகளும் மீண்டும் தலைதூக்கியுள்ளன. மல்லை சத்யாவின் கடிதம், வைகோ – துரை வைகோ – மல்லை சத்யா(Mallai Sathya Durai Vaiko Issue) இடையேயான முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து, மதிமுகவினருக்கு அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறது.
================