Manickam Tagore criticizes the DMK and AIADMK, alleging that they have joined forces to stop Vijay. source: google
தமிழ்நாடு

ஒரே இரவில் ஒன்றான எதிரிகள்? திமுக-அதிமுக ரகசியக் கூட்டணி? காங்கிரஸ் வெளியேற காரணம் இதுதான் : மாணிக்கம் தாகூர் !

விஜய்யைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஒன்றிணைந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் விமர்சனம்.

Kavitha prasanna

Manickam Tagore criticizes the DMK and AIADMK, alleging that they have joined forces to stop Vijay.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறி தற்போது ஒரு புதிய அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முந்தைய கூட்டணிக் கட்சி மற்றும் எதிரெதிர் துருவங்களாக இருந்துவரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதாக எழுந்துள்ள விமர்சனம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஒரே இரவில் ஒன்றான எதிரிகள்?

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

மாணிக்கம் தாகூர் எக்ஸ் பதிவு

இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த விஜய்யை.

காங்கிரஸ் வெளியேறியதற்கான காரணம்

காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது. RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.

காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது

“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?

அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள

'நிலையான அரசு' என்பது பயந்த இந்த இரண்டு கட்சிகளும் தங்களின் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் அரசியல் மொழி என்றும், இதனால்தான் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியது சரியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

======