Manickam Tagore, having assumed charge Tamil Nadu Congress chief, faces infighting to upcoming elections.  AI generated
தமிழ்நாடு

TNCC President : "கோஷ்டி பூசல், உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்கள்” : மாணிக்கம் தாகூருக்கு காத்திருக்கும் சவால்கள்..!

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் மாணிக்கம் தாகூருக்கு, கோஷ்டி பூசல், தேர்தல்கள் என அடுத்தடுத்த அக்னி பரீட்சை காத்திருக்கிறது.

Kannan

தமிழக காங்கிரஸ் கமிட்டி

Manickam Tagore TNCC President : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பு வகித்து வந்தார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்து இருந்தார்.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெக அரசுக்கு ஆதரவு தந்து, ஆட்சியிலும் அங்கம் வகிக்கிறது.

59 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் காங்கிரஸ்

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இருக்கிறது காங்கிரஸ். இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தவெக ஆதரவாளர் மாணிக்கம் தாகூர்

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பிய தலைவர்களில் ஒருவர் தான் மாணிக்கம் தாகூர்.

கூட்டணி கட்சிகளை இழந்த திமுக

திமுக தனது கூட்டணி கட்சிகளை இழந்து தனித்து விடப்பட்டிருக்கிறது. தற்போது தேமுதிகவை தவிர வேறு பெரிய கட்சிகள் எதுவும் திமுக கூட்டணியில் இல்லை.

விஜய் தலைமையில் தவெக ஆட்சி

தமிழக கட்சிகளும் இளைய தலைமுறைக்கு வழிவிடும் வகையில் அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. அதற்கு முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமர்ந்திருப்பது முக்கிய காரணம்.

அடுத்த 5 ஆண்டுகாலம் அவரை எதிர்த்தோ அல்லது இணக்கமாக சென்றோ அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் மற்ற கட்சிகளுக்கு உள்ளது.

மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்பு

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

1967ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கிறது. ஆளுங்கட்சியான தவெக உடனான கூட்டணியில் உயர்கல்வி, சுற்றுலா என இரண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளது.

மேலும் ராகுல் காந்திக்கு இணக்கமாகவும், தமிழக அரசியலில் அதிரடியாக காய் நகர்த்தக் கூடியவருமான இளம் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உட்கட்சி பூசல்

காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் தான். தொண்டர்களை விட அங்கு தலைவர்கள் அதிகம், அவர்களை சமாளிக்க வேண்டிய பெரிய வேலை மாணிக்கம் தாகூருக்கு இருக்கிறது.

செல்வப்பெருந்தகை, கே. எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், ப. சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார், தங்கபாலு எனப் கோஷ்டிகள் இருக்கின்றன.

கோஷ்டி பூசல்

இவர்களில் சிலர் இணக்கமாகவும், எதிரெதிராகவும் வேலை செய்வர்.

தேர்தல் நேரங்களில் இவர்களின் செயல்பாடுகளை மாநிலத் தலைவரை திக்குமுக்காட வைத்து விடும்.

எனவே, கோஷ்டி பூசலை சமாளித்து, தவெகவை அரவணைத்து செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மாணிக்கம் தாகூருக்கு உள்ளது.

சீண்டினால் பதிலடி - மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியை யாராவது சீண்டினால் ஒன்றாக பதிலடி கொடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது ஆரோக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

விரைவில் உள்ளாட்சி தேர்தல்

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. இதில் காங்கிரசுக்கு உரிய இடங்களை பெற்றுத் தருவதோடு, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றினால் தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.

2029 லோக்சபா தேர்தல்

2029 லோக்சபா தேர்தலை பொருத்தவரை அது காங்கிரசுக்கு வாழ்வா சாவா போராட்டம் தான். 2024ல் இருந்து பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது. பிரதமர் மோடி போன்ற வலிமைமிக்க தலைவரை சமாளிக்க வேண்டி இருக்கும்.

ராகுலின் பெருங்கனவு

அது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. தென் மாநிலங்கள் முழுமையாக கை கொடுத்து, வெற்றியை தந்தால் மட்டுமே, மத்தியில் ஆட்சி என்ற ராகுலின் கனவு நனவாகும்.

எனவே, லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை கேட்டுப் பெற வேண்டிய கட்டாயமும் மாணிக்கம் தாகூருக்கு உள்ளது.

விஜய் கையில் எதிர்காலம்

ராஜ்யசபா இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்த தவெக தலைவர் விஜய், 2029ல் எந்த முடிவை எடுப்பார் என்று கணிக்க முடியாது.

சாதிப்பாரா மாணிக்கம் தாகூர்?

எனவே, இணக்கம், சாமர்த்தியம், அரசியல் சாணக்கியம் இருந்தால் மட்டுமே, தமிழக காங்கிரஸ் எழுச்சி பெற முடியும். 59 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் வாய்ப்புகளை மாணிக்கம் தாகூர் எப்படி பயன்படுத்தி ஜெயிக்க போகிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

============================