Manickam Thakur responded to Vaiko's criticism, saying he will patiently accept the words of Congress leadership google
தமிழ்நாடு

‘‘தலைமை சொன்ன ஒத்த வார்த்தை, பொறுமையுடன் போகிறேன்’’ : வைகோ அவர்களே பயமில்லை : மாணிக்கம் தாகூர் நச் பதில்!

Manickam Thakur responded to Vaiko's criticism : தலைமை சொன்ன வார்த்தைக்காக பொறுமையுடன் கடந்து போவதாக, வைகோ வைத்த விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Kannan

திமுக கூட்டணியில் புகைச்சல்

Manickam Thakur has responded to Vaiko's criticism by saying that he will patiently accept the words of the leadership ; திமுக கூட்டணியில் இன்னும் புகைச்சல் ஓய்ந்தபாடில்லை. அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்கள் என்ற காங்கிரஸ் டிமாண்டிற்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

இதை உரத்த குரலில் வலியுறுத்திய மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் தலைமை இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

திமுக கூட்டணியில் 23ம் தேதி முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது.

அப்போதுதான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது தவெக கூட்டணிக்கு தாவுமா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்கும்.

காங்கிரஸ் பற்றி வைகோ

இந்தநிலையில் காங்கிரஸ் குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “காங்கிரசார் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் எழுப்புவர், அதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

கலகக்குரல் - அவர்களின் வழக்கம்

காங்கிரஸ் கட்சி தொடங்கியது முதலே, அக்கட்சியில் இருந்து கொண்டே கலகக்குரல் எழுப்புவது சிலரின் வாடிக்கை தான்.

கதர் சட்டைகள் கிழிக்கப்படுவது சகஜம்

பல இடங்களில் உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டு இருக்கின்றன. அவர்கள் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்த வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்து இருந்தார்.

வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

தலைமை சொன்ன ஒத்த வார்த்தை

அவர் தனது எக்ஸ் தளத்தில் "கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போகிறேன்.

வைகோ அவர்களே ”பயம் இல்லை”

பயந்துக்கிட்டு இல்லை அண்ணன் வைகோ அவர்களே" என்று பதிவிட்டு, வைகோவுக்கு பதில் அளித்துள்ளார்.

திமுக கூட்டணிக்குள் புகைச்சல்

காங்கிரஸ் குறித்த வைகோவின் கருத்துக்கு, மாணிக்கம் தாகூர் உடனடியாக எதிர்வினை ஆற்றி இருப்பதால், கூட்டணிக்குள் மேலும் புகைச்சலை அதிகரித்துள்ளது.

====