Manivasan appointed as Tamil Nadu's new Home Secretary- Anti-Corruption DGP Devasirvadham again; Election Commission  google
தமிழ்நாடு

புதிய உள்துறைச் செயலராக மணிவாசன் நியமனம் : மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியானார் தேவாசீர்வாதம்; தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ,தமிழக உள்துறைச் செயலரை அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டது

Rohini

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெறுகிறது.

234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை ஒட்டி தேர்தல் ஆணையம் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி உள்ளது

தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கின்றன.

இதனை ஒட்டி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதிகாரிகள் இடமாற்றம்

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தேவாசீர்வாதம், சென்னை டிஜிபி ஆகியோரை மாற்றம் செய்து அண்மையில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன்

அண்மையில் தேர்தல் ஆணையம் முக்கிய அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்

உள்துறை செயலர் மாற்றம்

தேர்தல் ஆணையம் தமிழக உள்துறை செயலராக இருந்த தீரஜ் குமாரை மற்றம் செய்து அதற்கு பதிலாக மணிவாசன் என்பவரை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது

இதற்கிடையே, தீரஜ்குமாருக்கு எந்த தேர்தல் பணிகளும் வழங்கப்படக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆயுத படைக்கு சந்திப் மிட்டல்; மாற்றம்

தற்போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை இயக்குநராக பதவி வகித்து வந்த சந்தீப் மித்தல், அந்தப் பொறுப்பில் இருந்து ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ,இந்த நிலையில்

சந்தீப் மித்தல் ஆயுதப்படை இயக்குநராக செயல்படுவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

========