Mekedatu Issue: Chief Minister Vijay Writes to Prime Minister Modi google
தமிழ்நாடு

மேகேதாட்டு விவகாரம் : பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் : நீர்வளத்துறை பதிலை திரும்ப பெற வலியுறுத்தல்..!

மேகேதாடு அணை விவகாரத்தில் நீர்வளத்துறை பதிலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தி இருக்கிறார்.

Rohini

மேகேதாட்டு அணை விவகாரம் , மத்திய அரசின் அதிருப்தி பதில்

காவிரியின் குறுக்கே மேகேதாடுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு பதிலை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த பதில் வேதனை அளிக்கிறது :முதல்வர் விஜய்

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டியதில்லை என்ற ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் பதில் , பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக , தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையிலை என்று தெரிவித்திருந்ததற்கு மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அனுமதி தேவையல்லை என்ற நீர்வளத்துறை பதிலை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

மேகேதாட்டு அணை தொடர்பாக கேள்வி எழுப்பிய பாமக தலைவரின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது

மேகேதாட்டுவில் கர்நாடகா புதிய அணை கட்டும் முயற்சியை மேற்கொள்வதற்கு, தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ‘‘காவிரி நதியின் குறுக்கே கட்டுமானத்தை மேற்கொள்ள கர்நாடகா அரசு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை பெற வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.

காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், மாநில எல்லைகளுக்குள் நீரைப் பயன்படுத்தவும், அதன் பயனை அனுபவிக்கவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

காவிரி திட்ட அறிக்கையை திருத்தம் செய்து சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிப்பு

மேகதாது அணை தொடர்பாக, கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவு மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு திட்ட அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும்” அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

==============