Mekedatu Issue: When will the all-party meeting be held in Tamil Nadu? M.K. Stalin questions Chief Minister Vijay.
முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை
மேகேதாட்டு அணை விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலனளிக்காது என தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் விவசாயிகள் சங்கத்தினரும் விடுத்த எச்சரிக்கைகளையும் மீறி செயல்பட்டதால் முதலமைச்சர் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்பதில் கர்நாடக அரசு திட்டவட்டமாக இருக்கும் சூழலில், சட்டரீதியாகப் போராடுவதே கடந்தகால அனுபவம் கற்றுத்தந்த பாடம் என்ற கருத்து வலுத்து வருகிறது.
தூது அனுப்பிய தமிழக அரசு
கர்நாடகம் சென்றால் காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற நோக்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சர், அம்மாநில அரசுக்குப் பேச்சுவார்த்தைக்கான தூது அனுப்பினார்.
கேட்டைப் போட்ட கர்நாடகா
காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, "இப்போதைக்கு நீங்கள் வர வேண்டாம்" எனக் கூறி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை கர்நாடக அரசு நிராகரித்துவிட்டது.
கர்நாடகாவின் அனைத்துக் கட்சிக் கூட்டம்
தமிழக முதலமைச்சரின் வருகையைத் தவிர்த்த கர்நாடக அரசு, ஆகஸ்ட் 2 அன்று அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரியைக் காப்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுமா?
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று முதலமைச்சர் திறம்படச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
கர்நாடகா அனைத்துக் கட்சிகளைக் கூட்டி தங்களது ஒற்றுமையை நிருபித்துள்ள நிலையில், "தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் எப்போது கூட்டப்போகிறார்?" என்ற கேள்வியையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் எழுப்பியுள்ளார்.
====