The Meteorological Department has announced that the impact of heatwaves will gradually increase in Tamil Nadu.  google
தமிழ்நாடு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் : வானிலை மையம் புதிய அப்டேட்

IMD Weather Forecast Tamil Nadu : தமிழகத்தில் வெயியிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Rohini

அதிகரிக்கும் வெப்பநிலை

IMD Weather Forecast Tamil Nadu : தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் அதே நேரத்தில் 15ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கும் வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 16ஆம் தேதி வரை மிக லேசான மழை பெய்யக்கூடும் எனவும் 17ஆம் தேதி மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : வரும் 21ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு : வானிலை புதிய அப்டேட்

சென்னையை பொறுத்த வரை வெயிலின் தாக்கம்

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் . தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.