Minister Adhav Arjuna said that Chief Minister Vijay fulfilled the dream of Anna and Periyar google
தமிழ்நாடு

அண்ணா, பெரியார் கனவை நிறைவேற்றம் : ”சமூகநீதி, மதச்சார்பின்மை அரசு” : ஆ. ராசா பேச்சுக்கு கண்டனம், ஆதவ் அர்ஜூனா!

அண்ணா, பெரியாரின் கனவை முதல்வர் விஜய் நிறைவேற்றி இருப்பதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

Kannan

முழுமை பெற்ற தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டு விட்டது. அமைச்சரவை எண்ணிக்கை 35 ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சரவையில் அனைவருக்கும் வாய்ப்பு

‘’ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று நாங்கள் அறிவித்தபோது எல்லோரும் விமர்சித்தனர். ஆனால், எவ்வித குடும்ப, சாதி பின்புலத்தைப் பார்க்காமல், இளைஞர்கள், பெண்களுக்கான அமைச்சரவையை முதல்வர் விஜய் உருவாக்கி உள்ளார்.

அண்ணா, பெரியார் கனவு நிறைவேற்றம்

அண்ணா, பெரியாரின் கனவை முதல்வர் விஜய் நிறைவேற்றி உள்ளார். அண்ணா கனவு கண்ட அமைச்சரவை இன்று நனவாகி உள்ளது. தமிழக வரலாற்றில் இது சாத்தியமா என்று எல்லோருமே கேள்வி எழுப்பினர்.

ஆனால் இன்று தலித் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவே வியக்கும் அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது.

மதச்சார்பின்மை அரசு

மத, சாதி அரசியலை தூக்கி எறிந்த முதலமைச்சர் விஜய் இந்த தேர்தலில் பண பலம் தூக்கி எறியப்பட்டுள்ளது. மத, சாதி அரசியலை முதலமைச்சர் விஜய் தூக்கி எறிந்துள்ளார்.

தமிழக வரலாற்றில் சாத்தியம் இல்லாததாக கூறப்பட்ட ஒன்று, இன்று சாத்தியம் ஆகியுள்ளது.

காங்கிரஸ், விசிக கனவு நிறைவேற்றம்

59 ஆண்டு காங்கிரஸ் கனவையும் 30 ஆண்டு விசிக கனவையும் முதல்வர் விஜய் நிறைவேற்றி உள்ளார். சமூக நீதி கொண்ட அரசு அமைந்துள்ளது. நிபந்தனை இல்லாத ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் மகிழ்ச்சி

’இன்றுதான் எனது அமைச்சரவை முழுமை பெற்றது’ என்று முதல்வர் விஜய் தெரிவித்தார் திருமா பதவிக்கோ, பணத்திற்கோ ஆசைப்படுபவர் கிடையாது.

கண்ணியமில்லாத திமுக

திமுகவில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை. அவர்களின் கருத்து திருமா மற்றும் விசிகவினரை கடுமையாக காயப்படுத்தி உள்ளது. திருமா பதவிக்கோ, பணத்திற்கோ ஆசைப்படுபவர் கிடையாது. தனிப்பட்ட முறையில் காயப்படுத்துவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்.

பெண்களை விமர்சிப்பதா? ராசாவுக்கு கண்டனம்

எந்தக் கட்சியும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த கட்சி கிடையாது. தனிநபர் விமர்சனத்தை அதுவும் பெண்களை கடுமையாக விமர்சனம் செய்வது சரியா?

ஆ.ராசாவின் பேச்சுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் கனிமொழி ஆகியோர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.’’ இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டியளித்தார்.

======================