Minister Anand hit back Raghupathy, allegations of commission, they must be proven with evidence AI generated
தமிழ்நாடு

"நீர்வளத் துறையில் 3% கமிஷன்?" : ரகுபதி குற்றச்சாட்டு : ”ஆதாரம் இருக்கா?” அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் ஆவேசம்..!

தவெக ஆட்சியிலும் கமிஷன் வாங்குகிறார்கள் என்றால் ஆதரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று, திமுகவின் ரகுபதிக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி கொடுத்தார்.

Kannan

பட்ஜெட் மீது சட்டசபையில் விவாதம்

சட்டப் பேரவையில் 2026-27 நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் பேரவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னாள் அமைச்சர் ரகுபதி

இன்றைய விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, ”நீர்வளத்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகையை வழங்கிட 3 சதவீதம் கமிஷன் கொடுத்தால் தான் வேலையே நடக்கிறது. பொதுப்பணித் துறையில் பில் தொகை பெற 5 சதவீதம் வரை கேட்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

அமைச்சர் ஆனந்த் பதிலடி

இதற்கு பதிலளித்து ஆவேசமாகப் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், "கமிஷன் வாங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினால் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதுவெல்லாம் பழைய காலம்.

ஒரு ரூபாய் லஞ்சம் கிடையாது

இப்போது எங்கள் ஆட்சியில் ஒத்த ரூபாய் கூட லஞ்சமாக வாங்குவதில்லை. நாங்கள் லஞ்சம் வாங்கினால், எங்களை இங்கு உட்கார விடமாட்டார் எங்கள் முதல்வர்.

ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க

எந்த ஆதாரமும் இல்லாமல் பேசக்கூடாது. பில்லுக்கு 3 சதவீதம் என்கிறீர்களே, அந்த பில்லை பேரவையில் கொடுங்கள். ஒருவேளை 3 சதவீதம் கேட்கிறார்கள் என்று சொல்வது உங்களின் பழைய பழக்கதோஷமாக கூட இருக்கலாம்" என்றார்.

ஆதவ் அர்ஜுனா கேள்வி

"லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம் என்பதில் எங்கள் முதல்வர் மிகத் தெளிவாக உள்ளார். இதுவரை எந்த அமைச்சரோ, எம்.ல்ஏவோ ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

60 ஆண்டுகளாகத் தொடர்ந்த கட்சி நிதி, அமைச்சர் நிதி என்ற கமிஷன் கலாசாரத்தையே எங்கள் முதல்வர் முற்றிலும் தூக்கி எறிந்துள்ளார்" எனக் குறிப்பிட்டார்.

காரசாரமான விவாதமும், அமைச்சர்களின் பதிலடி அவையில் புயலை கிளப்பியது.

======================