தவெக அரசின் பட்ஜெட்
Minister Maria Wilson on DMK Ex Ministers Corruption List : முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி ( அடுத்த வாரம் புதன்கிழமை ) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதி அமைச்சர் மரிய வில்சன்
இதற்கான வேலைகளில் நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் எனப் பல்வேறு வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
திமுகவின் ஊழல்கள்
பட்ஜெட் அறிக்கை தயாரிப்பு பணிகள் உடன் கூடுதலாக ஒரு வேலையை அமைச்சர் மரிய வில்சன் கையில் எடுத்துள்ளார். அதுதான் திமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பான பட்டியல் தயாரிப்பு.
வெளியாக இருக்கும் ஊழல் பட்டியல்கள்
இதுகுறித்து விரிவான தணிக்கை அறிக்கையை தயாரித்து வருவதாகவும்,
நடப்பு கூட்டத்தொடரில் ஊழல் அறிக்கை வெளியிடப்படும். அடுத்தடுத்து ஊழல் தொடர்பான அறிக்கைகள் வெளிவந்து கொண்டே இருக்கும். சில விஷயங்களை முன்கூட்டியே வெளியிட முடியாது. அமைச்சர் மரியல வில்சன் தெரிவித்து இருக்கிறார்.
ஊழலால் வீழ்ந்த திமுக
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் வித்திட முக்கிய காரணம், அரசு அலுவலகங்கள் முதல் அமைச்சர்கள் மட்டம் வரை பல்வேறு படிநிலைகளில் லஞ்சம் வாங்கியுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள். இது சாமானியர்களின் அன்றாட வாழ்வில் பெரும் நெருக்கடியாக மாறியது.
அரசு அலுவலகங்களில் ஊழல் இல்லை
தவெக ஆட்சி அமைந்து 60 நாட்களை கடந்துள்ள நிலையில், பலரும் நிம்மதி பெருமூச்சு விடும் விஷயமாக பார்க்கப்படுவது அரசு அலுவலகங்களில் முன்பை போல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்பது தான்.
தூசு தட்டப்படும் அதிமுக ஊழல்கள்
திமுகவினர் செய்த ஊழல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதோடு, அதிமுக மாஜிக்கள் மீதான வழக்குகளை தூசு தட்டவும் தவெக முடிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு துணையாக நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மவுனமாகி போன ஊழல் வழக்குகள்
2021ல் திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான
ஊழல் வழக்குகள் தூசு தட்டப்பட்டன. ரெய்டுகள் அடுத்தடுத்து அரங்கேறின.
ஆனால் அதன்பிறகு கைது நடவடிக்கைகள், விசாரணை, தண்டனை என எதுவும் நடக்கவில்லை.
அப்படியான ஒரு நிலைக்கு தவெக அரசு சென்றுவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
===================