கே.என். நேரு - லஞ்ச ஒழிப்பு சோதனை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அவருடைய இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் அடையாறு, அண்ணா நகர், மயிலாப்பூர், ஆரியபுரம், திருவான்மியூர் உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது.
அவரின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நிர்மல்குமார் விளக்கம்
இதுபற்றி கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், ,
K.N.நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.
புகாரின் அடிப்படையில் ரெய்டு
ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது.லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை என்பது முற்றிலும் தனிப்பட்ட நடைமுறை என்றும், அதில் யாரும் தலையிட முடியாது.
விரைவில் அறிக்கை தருவார்கள்
அங்கு என்ன நடந்துள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரே அதிகாரப்பூர்வமாகத் தகவல்களை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின் கண்டனம்
கே.என். நேரு வீட்டில் சோதனை நடந்து வருவது தொடர்பாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற கூட்டத்தொடரும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அவர்கள் மீது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே தவெக அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது” என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
==============