தமிழக அரசின் வெள்ளை அறிக்கை
முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, நிதி அமைச்சர் மரிய வில்சன் சில நாட்களுக்கு முன்பு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தனிநபர் கடன்சுமை ரூ.1,28,934
அதில், 2021- 2022ம் ஆண்டு தனிநபரின் கடன் சுமை 67,087 ரூபாயாக இருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகத்தில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ 1,28,934 கடன் இருக்கிறது. திமுக ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடனாளியாக பிறக்கும் குழந்தைகள்
தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களை விட அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது. 60 ஆண்டில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ 5 லட்சம் கோடி. கடந்த திமுக ஆட்சியில் அதிக கடன் பெற்றுள்ளது.
வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு
தமிழக அரசு ஆண்டுக்கு வட்டி மட்டுமே 67 ஆயிரம் கோடி செலுத்துகிறது. வருவாய் பற்றாக்குறை 2025- 2026-ல் 78,324 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ 13.18 லட்சம் கோடியாகும். தனி நபர் கடன் ரூ 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது.
மின்சார வாரிய வெள்ளை அறிக்கை
இந்த நிலையில், மின்சார வாரியத்தின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை
கடந்த கால நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் மிக விரிவான 'வெள்ளை அறிக்கை' (White Paper) அடுத்த வாரத்தில் தவெக அரசால் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படும்.
மின்மாற்றிகள் கொள்முதலில் ஊழல்
மின்சார வாரியத்திற்காகச் சுமார் 44,000 டிரான்ஸ்பார்மர்கள் (மின்மாற்றிகள்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அநியாய விலைக்குக் கொள்முதல் செய்து இமாலய ஊழல் நடத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
சிபிஐ விசாரணை
இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, தற்போது தீவிரமான சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லி அதிகாரிகள் களமிறங்க உள்ளது
மின்வெட்டு - பராமரிப்பில் அலட்சியம்
தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கும் மின்வெட்டுகளுக்குப் பின்னால் வெறும் 'தொழில்நுட்பக் கோளாறு' மட்டும் இல்லை. கடந்த ஆட்சியில் உள்கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்காமல் விட்டதுமே முக்கியக் காரணம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
பொதுமக்களின் வரிப்பணம் எங்கே போனது என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்பதே இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
=============================