Minister orders closure of 18 quarries in Tenkasi for violating rules  google
தமிழ்நாடு

தென்காசியில் விதி மீறல்களில் ஈடுப்பட்ட 18 கற்குவாரிகளை மூட அமைச்சர் உத்தரவு

தென்காசியில் கற்குவாரி முறைகேடு தொடர்பாக வந்த புகாரை அடுத்து குவாரிகளை மூட அமைச்சர் டி.கே பிரபு உத்தரவிட்டுள்ளார்

Rohini

கற்குவாரிகளை மூட உத்தரவு

தென்காசியில் கற்குவாரி முறைகேடு தொடர்பாக வந்த புகாரை அடுத்து 18 குவாரிகளை மூட அமைச்சர் டி.கே பிரபு உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கற்குவரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல், ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் 25.05.2026 அன்று அதிகாலை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட 3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கற்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கற்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.

மேலும், மேற்படி 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

=========================