Minister Parvesh gave explanation in Legislative Assembly regarding ammonia gas leak incident in Tiruvallur google
தமிழ்நாடு

அம்மோனியா வாயு கசிவு, 5 பேர் பலி : பேரவையில் அமைச்சர் விளக்கம் : ரு.2 லட்சம் நிவாரணம், 3 நாட்களில் முழு அறிக்கை...!

திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அமைச்சர் பர்வேஷ் விளக்கம் அளித்தார்.

Kannan

எதிர்க்கட்சிகள் அமளி

சட்டமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரி அம்மோனியம் வாயு கசிவு விபத்து தொடர்பாக அமைச்சர் பர்வேஷ் விளக்கமளித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் வெள்ளை அறிக்கை, மேகதாது விவகாரம் தொடர்பாகவும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் வாயுக்கசிவு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் அம்மோனியம் வாயு கசிவு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சட்டமன்றத்தில் அமைச்சர் விளக்கம்

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஷ் 110வது விதியின் கீழ் இதுதொடர்பாக விளக்கமளித்தார். “ஜூன் 21ம் ஆண்டு திருவள்ளூரில் கடல் உணவுகளை பதப்படுத்தும் நிறுவனத்தில் அம்மோனியா வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இதுவரை அங்கு பணியில் இருந்த 74 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 70 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் அரசு மருத்துவனையில், 21 பேர் தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

5 பெண்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ரூ. 2 லட்சம் நிவாரணம்

உயிரிழந்த வடமாநில தொழிலாளர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி நல்லடக்கம் செய்யும் செலவை அரசே மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.

முதற்கட்ட விசாரணை

இந்த விபத்து தொடர்பாக சுகாதாரத்துறை, தொழிலாளர் பாதுகாப்புத்துறை இயக்குநர் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்றது.

மூன்று நாட்களில் அறிக்கை

முழுமையான விசாரணை 3 நாட்களில் நடைபெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் (ESI) திட்டம், வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 54,954 தொழிற்சாலைகள்

தமிழ்நாட்டில் 54,954 தொழிற்சாலைகள் இயங்குகிறது. அதில் 27,65,313 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதில் அபாயகரமான தொழிற்சாலைகள் பிரிவில் 6,669 உள்ளது.

விபத்துகளை தடுக்க நடவடிக்கை

இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தடுக்கும்பொருட்டு குழு அமைக்கப்பட்டு எதிர்காலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் பர்வேஷ் உறுதியளித்தார்.

====