Jayalalithaa will not forgive OPS, we will remove the corrupt DMK government: Piyush Goyal speech source: google
தமிழ்நாடு

OPS-யை ஜெயலலிதா மன்னிக்க மாட்டார் : ஊழல் திமுக அரசை அகற்றுவோம் : பியூஸ் கோயல்!

Minister Piyush Goyal Criticized OPS Join DMK : மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறியுள்ளார்.

S Kavitha

சட்டமன்ற தேர்தல் 2026

Minister Piyush Goyal Criticized OPS Join DMK : தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கும் நிலையில், இரண்டு நாள் பயணமாக இன்றிரவு பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பு

ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் அவர், நாளை காலை புதுச்​சேரி​யில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்கிறார்.

நிறைவடைந்த திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

பின்னர் மதுரை செல்லும் பிரதமர், அங்குள்ள விமான நிலைய வளாகத்​தில் வான் கட்​டுப்​பாட்டு கோபுரத்தை திறந்து வைத்து, புதுப்​பிக்​கப்​பட்ட ரயில் நிலை​யங்​கள், பரமக்​குடி - ராம​நாத​புரம் நான்கு வழிச் சாலை திட்​டங்​களை காணொலி வாயி​லாகத் அர்ப்பணிக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம்

மாலை 4 மணி​யள​வில் திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​கிறார்.

பின்னர் மண்​டேலா நகரில் நடை​பெறும் தேசிய ஜனநாயக கூட்​டணி தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

மதுரையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

பிரதமர் மோடி கலந்துகொள்லும் இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மதுரை வந்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மீண்டும் அதிமுக ஆட்சி தான்

செய்தியாளர்களிடம் பேசும் போது, மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி தான் அமையும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் நிச்சயமாக வெற்றியடைய வைப்பார்கள். பாஜக - அதிமுக கூட்டணி குடும்பம் போல உள்ளது என்றும் கூறினார்.

தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

தொடர்ந்து பேசிய அவர்,ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டதை குறிப்பிடும் வகையில், ஜெயலலிதாவின் முதுகில் ஓ.பன்னீர்செல்வம் குத்திவிட்டார். அதனால் அவரை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

ஊழல் திமுக அரசை அகற்றுவோம்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம் என்றும் தமிழக மக்களின் பாரம்பரியம் , கலாசாரம், இறையாண்மை முதலானவற்றை திமுக அரசு கெடுத்து விட்டது என்றார். மேலும், ஊழல் திமுக அரசை அகற்றுவோம் என்றும் தெரிவித்தார்.