சட்டசபையில் இன்று அமைச்சர் ராஜ் மோகன் பேச்சு:
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு விவாதம் நடைபெற்றது.
அப்போது பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழர்களை பாதுகாப்பாக மீட்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
57 தமிழர்கள் நிலை என்ன?
கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் மூலம் மூன்று வேன்களில் நேபாளம் சென்ற 57 தமிழர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
இதில் ஒரு வேனில் இருந்த 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
மீதமுள்ள 37 பேரின் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை விரைந்து கண்டறிந்து பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை :
எனவே இதனிடையே இன்று முதலவர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவித்திருந்த நிலையில் ,அமைச்சரவை கூட்டத்தை கூடி அடுத்த நடவடிக்கை கூறித்தி அதிகரிளிடமும் மற்றும் அமைச்சர்களிடமும் முதல்வர் விஜய் தீவிர அலசோனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இதற்கிடையே தமிழக அரசாங்கம் சட்டபிள் உதவி எண்களும் அறிவிக்கபட்டுருக்கிறது .
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் :
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
குறிப்பாக, 57 பேரில் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 37 பேரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவலை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழர்களை விரைந்து மீட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.