Minister Rajmohan has firmly stated that no one will be spared in the matter of the procurement of fake books.
தவெக ஆட்சியில் கொள்முதல் இல்லை
டெல்லி சென்றிருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒரு புத்தகம் கூட கொள்முதல் செய்யப்படவில்லை.
பல நூலகங்களில் போலி நூல்கள்
"பெரியார் நூலகம் மட்டுமல்ல... பல நூலகங்களில் போலி நூல்கள் உள்ளன" நூல் கொள்முதல் நடந்தது திமுக ஆட்சியில் தான்.
யாரும் தப்பிக்க முடியாது
போலி புத்தகங்கள் கொள்முதல் விவகாரத்தில், யாரையும் தப்பிக்க விட மாட்டோம். கன்னிமாரா நூலகத்தில் நானே 500க்கும் மேற்பட்ட போலி புத்தகங்களை பறிமுதல் செய்தேன்.
இதுபோன்ற தவறுகள் எந்த மாநிலத்திலும் நடக்க கூடாது என்பதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட குப்பை புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளோம்.
திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாடு மாணவர்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். நூலகங்களில் உள்ள ஆங்கில நூல்களை இன்னும் ஆய்வு செய்யவில்லை.
புத்தக ஊழல் - உலகில் முதன்முறை
நூலக கட்டுமானங்களில் ஊழல் என்பது பல நாடுகளில் நடந்து இருக்கிறது. ஆனால், உலகிலேயே முதன்முறையாக புத்தக கொள்முதல் ஊழல் என்பது இதுதான்.
அரசியல் தலையீடு இல்லாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. புத்தக கொள்முதல் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கும். விஜய் பெயர் போட்ட புத்தகங்களையும் திமுக ஆட்சி தான் கொள்முதல் செய்துள்ளது” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
===================