Minister Sengottaiyan has stated that another 10 MLAs from the AIADMK are set to join TVK. AI generated
தமிழ்நாடு

"ADMK to TVK, தாவத் தயாராக 10 MLA-க்கள்" : கூடாரம் காலியாகும், மதிமுக நிலைதான் : அமைச்சர் செங்கோட்டையன் பகீர் தகவல்...!

அதிமுகவில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் தவெகவிற்கு வர இருப்பதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

தவெகவில் அதிமுகவினர்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகமாகி இருக்கிறது. 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்து விட்டனர். எனவே, இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

எடப்பாடிக்கு எதிராக தனி அணி

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, அதிருப்தியில் இருப்போரும், தவெக ஆதரவு என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். இவர்கள் பேரவையில் தனி அணியாகவே செயல்பட்டு வருகின்றனர்.

செங்கோட்டையன் அதிரடி தகவல்

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தவெகவின் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

அதிருப்தியில் அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் செயல்பாடுகளால் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

தவெகவில் இணைய மிகவும் ஆர்வம்

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 100 நாள் சாதனை ஆட்சியைக் கண்டு வியந்து, மக்கள் நலப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள அவர்கள் விரும்புகின்றனர்.

தாவத் தயாராக இருக்கும் 10 எம்எல்ஏக்கள்

அதன் முதற்கட்டமாக, அதிமுகவில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் மிக விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்கள் என்று பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

சரிவின் பிடியில் அதிமுக

தேர்தல் தோல்வி மற்றும் உள் கட்சிப் பூசல்களால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஏற்கனவே கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. அதிமுகவில் நீண்ட காலம் செல்வாக்குடன் இருந்தவர் செங்கோட்டையன்.

பலம் பெரும் தவெக

ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கும் தவெகவிற்கு, இந்த 10 புதிய எம்.எல்.ஏ-க்களின் சேர்க்கை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அக்கட்சியின் பலத்தை மேலும் அசைக்க முடியாத இடத்திற்கு எடுத்துச் செல்லும்.

அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி பேச்சு, இதை நடைபெறாமல் தடுக்க அதிமுக தலைமை என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

=================