தவெக அரசு
தமிழகத்தில் ஆளும் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் விஜய் அதில் வெற்றி பெற்றார். அரசு மீது 6 மாதங்களுக்கு ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.
தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. எனவே, திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறதா
திமுகவின் நிலைப்பாடு
தவெக அரசு மீது அவர்கள் கட்சி எம்எல்ஏக்களே அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பினார்.
இதனிடையே, மாமல்லபுரத்தில் எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் நேற்று தனித்தனியாக சந்தித்து பேசி இருந்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் பதில்
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "நம்பிக்கையில்ல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறதா? என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்.
எதையும் எதிர்கொள்ளத் தயார்
எதிர்க்கட்சிகள் யாரும் சொல்லவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதையும் சந்திக்க அரசு தயாராக உள்ளது" என்று உறுதிபடக் கூறினார்.
சட்டமன்றத்தில் 5 இடங்கள் காலி
தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா காரணமாக 5 இடங்கள் காலியாக உள்ளது. இதனால் தற்போதைய உறுப்பினர்கள் பலம் 229 ஆகும். இதில் பெரும்பான்மையை காட்ட 115 பேரின் ஆதரவு தேவை.
தவெகவிற்கு 109 எம்எல்ஏக்கள்
தவெகவிற்கு தற்போது 109 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே பெரும்பான்மையை நிரூபிக்க மேற்கொண்டு 6 எம்.எல்.ஏக்கள் இருந்தால் போதும்.
கூட்டணிகள் ஆதரவு
காங்கிரஸ் (05) விசிக (02), ஐயூ.எம்.எல். (02) எம்.எல்.ஏக்கள் தற்போது உள்ளனர். இடதுசாரி எம்எல்ஏக்கள் 4 பேர் வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள். எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், அதை தவெக அரசால் தொற்கடிக்க முடியும்.
===============