ரேஷன் அரிசி - அமைச்சர் விளக்கம்
சட்டசபையில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ”இன்று பெரும்பாலான மக்கள் ரேசன் அரிசி சாப்பிடுவதில்லை. நமது ஆட்சியில் வழங்கும் அரிசி சன்ன ரக வகைகளை கொடுப்போம் என முதல்வர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
ரேசன் கடையில் கொடுக்கும் அரிசியை மக்கள் சாப்பிட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளதாகவும், அதனால் தான் சன்ன நெல் ரக உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
90% மக்கள் ரேசன் அரிசி சாப்பிடுவதில்லை
90 சதவீதம் மக்கள் ரேசன் அரிசி சாப்பிடுவது இல்லை. இட்லி மாவாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த காலங்கள் ரேசன் அரிசி கடத்தல் இருந்தது அது தடுக்கப்பட்டுள்ளதா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இலவசங்கள் என கொச்சைப்படுத்த கூடாது
அதற்கு எதிர்தரப்பில் இருந்து கேள்வி எழுப்பட்ட நிலையில், யாரும் யாரையும் கொச்சைப்படுத்த வில்லை, உண்மையான சூழல்களை சொல்கிறேன், இலவச மருத்துவமனைக்கு நாம் சென்றது இல்லை. இலவச உணவுகளை சாப்பிட்டது இல்லை.
இலவசம் என்ற வார்த்தையே தவறு இது மக்களின் உரிமை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலளித்தார்.
ரேஷன் அரிசியால் சுகர் குறையுமா?
குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சக்கரை நோய் வந்தவர்கள் ரேசன் அரிசி சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என மருத்துவர்கள் கூறியதால் ரேசன் அரிசியை சாப்பிட்டு வருகிறோம்.
தாளடி பட்டத்தில் மட்டுமே சன்ன ரக நெல் உற்பத்தி இருக்கும். அதை ரேசன் கடைகளில் கொடுக்க சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.
அரிசி கையிருப்பு திருப்திகரம்
அதற்கு பதிலளித்த அமைச்சர் வெங்கடரமணன், நம்மிடம் அரிசி கையிருப்பு அதிகம் உள்ளது. அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை,
தீபாவளிக்குள் சன்னரக அரிசி
தீபாவளிக்குள் ரேஷன் அட்டைதார்களுக்கு சன்ன ரக அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
===========