Minister Vinoth hit back Stalin, stating that agriculture budget is not an empty budget, successful one Ai generated
தமிழ்நாடு

”வெற்று பட்ஜெட் அல்ல, வெற்றி பட்ஜெட்” : ஸ்டாலினுக்கு அமைச்சர் வினோத் பதிலடி : சூரியனுக்கே வியர்த்து விட்டதாக பேச்சு..!

தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் கிடையாது, வெற்றி பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் வினோத் பதிலடி கொடுத்துள்ளார்.

Kannan

வெற்று பட்ஜெட் அல்ல, வெற்றி பட்ஜெட்

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, வேளாண் துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார். தமிழக வெற்றிக் கழக அரசின் வேளாண் பட்ஜெட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘வெற்று பட்ஜெட்’ என விமர்சித்திருந்தார்.

லஞ்சம் இல்லாத சிறந்த ஆட்சி

ஆனால் இது வெற்று பட்ஜெட் அல்ல; விவசாயிகள் போற்றும் 'வெற்றி பட்ஜெட்'. 'இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும்?' என சிலர் கேட்டனர். ஆனால், முதலமைச்சர் விஜய் எந்தவித லஞ்சமும் இல்லாத சிறந்த ஆட்சியைத் தந்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் தேவை

வாக்குறுதிகளை நிறைவேற்ற எதிர்க்கட்சியினர் அரசுக்குப் போதிய கால அவகாசத்தை வழங்க வேண்டும். விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் நலனே முக்கியம்

வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல், சில கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையை வெற்றுப் பட்ஜெட் என்று கூறியுள்ளனர். ஆனால், இது வெற்றுப் பட்ஜெட் அல்ல. தமிழ்நாட்டு விவசாயிகள் போற்றும் வெற்றிப் பட்ஜெட்டை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

உங்கள் தவறுகளை சரிசெய்யுங்கள்

“தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்என் குற்றம் ஆகும் இறைக்கு”

என்ற திருக்குறளை நினைவுபடுத்திய அமைச்சர், பிறரது தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு முன்பு நாம் செய்த தவறுகளை சரிசெய்துகொள்ள வேண்டும் என்றார்.

சூரியனுக்கே வியர்த்து விட்டது

முதல்வர் விஜய் குறித்து பேசிய அமைச்சர் வினோத், அனைவருக்கும் சூரியனால் தான் வியர்க்கும். ஆனால் நீங்கள் (முதலமைச்சர் விஜய்) வந்த பிறகு அந்தச் சூரியனுக்கே வியர்த்துவிட்டது என புகழாரம் சூட்டினார்.

எட்டாத உயரத்தில் சூரியன்

சூரியனுக்கே வியர்த்தது என்ற பேச்சிற்குப் பதிலடி கொடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், இதுவரை யாரும் நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறது என்றார்.

6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

கடும் நிதி நெருக்கடி நிலையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி: வினோத்

பொது ரகம், சன்ன ரகம் நெல் மற்றும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் உயர்த்தியுள்ளார்.

தமிழகத்தின் இதயம் விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப சில திட்டங்களை மேம்படுத்தி, அவற்றின் பெயர்களை மாற்றியுள்ளோம். தமிழகத்தின் இதயமே விவசாயிகளிடம் தான் உள்ளது. ரூ.134 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

3.98 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி

நடப்பாண்டில் 3.98 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடும் நிதி நெருக்கடி நிலவியபோதிலும் ரூ.6,000 கோடி அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

============