பள்ளியில் ஆய்வு மேற்மேற்கொண்ட அமைச்சர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார்
தொடர் ஆய்வின் ஈடுப்பட்டிருந்த அமைச்சர் கீர்த்தனா, ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் சில கேள்விக்ளை கேட்டு , பதலளிக்குமாறு தெரிவித்திருந்தார், அப்போது அந்த மாணவி பதிலளிக்காமல் திணறினார்
லாஸ்ட் பெஞ்ச் தாழ்வு மனப்பான்மையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர்
அதற்கு அமைச்சர் கீர்த்தனா, 'முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்' என்று தெரிவித்தார் .
இது தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, பேசுபொருள்ஆகி சர்ச்சையை ஏற்ப்படுத்தியிருக்கிறது
பள்ளியில் பேசியைதை வீடியோ வெளியிட்டதால் , மானவியின் தனிப்பட்ட நலனை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு வீடியோ பதிவிட்டிருப்தற்கு எதிர்கட்சிகள கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன
முன்னாள் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதாவது
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல! மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்
என்று பதிவிட்டுள்ளார்
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது.
It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.என்று அமைச்சர் கீர்த்தனாவில் வீடியோ பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
வீடியோ சர்ச்சை - அமைச்சர் நிர்மல் குமார்
அமைச்சர் கீர்த்தனாவில் பள்ளி ஆய்வு குறித்து விளக்க்ம அளித்தியுள்ள மின்சாரதுறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளதாவது
அரசு பள்ளிகள், அலுவலகங்களுக்கு சென்று தேவையில்லாத ஆய்வுகளை செய்ய வேண்டாம் என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பணியாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளையும் சீரமைக்க வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை, போதிய செவிலியர்கள் இல்லை. அதையெல்லாம் சரிசெய்ய வேண்டியுள்ளது. என்று அமைசரின் வீடியோவிற்கு பதிலளித்துள்ளார்
=========================