Kalaignar Son & Actor MK Muthu Passed Away Today 
தமிழ்நாடு

MK Muthu Death : கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்

Actor MK Muthu Passed Away : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலையுலக வாரிசாக கருதப்பட்ட மு.க. முத்து காலமானார். அவருக்கு வயது 77.

Kannan

கருணாநிதியின் கலையுலக வாரிசு :

Actor MK Muthu Passed Away: கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்கு மகனாக 1948ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பிறந்தவர் மு.க. முத்து. வாலிப வயதை அடைந்ததும், அவரை திரையுலகில் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி. தந்தை கருணாநிதியின் கலையுலக வாரிசாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் மு.க. முத்து.

பன்முகத்தன்மை கொண்ட முத்து :

1970களில் வெளியான பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த மு.க. முத்து, நடிப்பு திறமையையும் கடந்து சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை பாடியுள்ளார்.

எம்ஜிஆருக்கு போட்டியாக மு.க.முத்து :

எம்ஜிஆருக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டவர் என்ற பொதுவான கருத்து நிலவினாலும், மு.க.முத்து(MK Muthu) நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்து கிளாப் அடித்து எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார் மு.க.முத்து.

மேலும் படிக்க : விடைபெற்றார் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி : காளிதாஸ் - ஆதவன் வரை

உடல் நலக்குறைவால் காலமானார் மு.க.முத்து :

தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவரை விட்டு விலகியிருந்த மு.க. முத்து, சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர் இன்று காலை காலமானார்(MK Muthu Death). அவருக்கு வயது 77. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பத்தார் மு.க. முத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.