ஆட்சி அமைக்கும் தவெக
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனி பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது.
59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக இரண்டாவது இடத்தில் உள்ளது.
10 சீட்கள் தேவை
இதனால் தவெக ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 தொகுதிகள் தேவைப்படும் தவெக அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ராஜினாமா செய்தார் ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் தோல்வி
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தமிழக மக்களுக்கு நன்றி
இந்தநிலையில், "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
விலைமதிப்பற்ற வாக்குகள்
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
வாக்காளர்களுக்கு நன்றி
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி திமுக கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.மாவட்ட செய்திகள்
தவெக - திமுக வித்தியாசம் குறைவு தான்
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே.
திமுக மீது மக்கள் நம்பிக்கை
என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம்.
தோல்வியை கடந்து பயணிப்போம்
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம்.
வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள்.
அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.அரசியல் பார்வை
திமுகவுக்கு 1.54 கோடி வாக்குகள்
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?
தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம்.
அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்" என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
=============