பதவியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அம்மா மக்கள் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகம் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால்
திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது எக்ஸ் தள பதிவில் தெர்வித்துள்ளார்
இது கட்சிகும் மககளுக்கும் செய்த துரோகம் : டி,டிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தள ஆதாவைத் தெரிவித்திருப்பது கட்சியின் கோட்பாடுகளுக்கும் முரணானது. குறிக்கோள்களுக்கும்
அவரின் திரு.S.காமராஜ் அவர்களின் இன்றைய செயல்பாடு, வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்
அமமுகவிலிருந்து நீக்கம் :தினகரன் விளக்கம்
குறிக்கோள்களுக்கும் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.