வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஜூன் 8 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு பரவலான மழை பெய்ய வாய்ப்பு
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பாதை
மேலும், கிழக்கு மத்திய பிரதேசம் முதல் வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு
இதன் காரணமாகத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றுமுதல் (ஜூன் 3) முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 3, 4: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பின்வரும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும்
உள் மற்றும் வட மாவட்டங்களான ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5 (வெள்ளிக்கிழமை) மழை நிலவரம்
தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை,
மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
======