Nainar Nagendran Placed Under House Arrest Ahead of Thiruparankundram Visit Google
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் செல்ல திட்டம் : நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு : திருநெல்வேலியில் போலீஸ் குவிப்பு..!

திருப்ப தலைரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம் என்று கூறிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளார்...

NARENDRAN K

நயினார் நாகேந்திரன் வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு :

இந்த நிலையில், திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் வீட்டை சுற்றி 40-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யும் வகையில் போலீசார் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் கைது செய்யலாம் என்றும், வீட்டிலேயே வைத்து கைது செய்யக்கூடாது என்றும் போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்து அமைப்பு நிர்வாகி கைது :

இதற்கிடையே, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்றபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை தொடர்ந்து திருநெல்வேலியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

திருப்பரங்குன்றம் செல்லும் திட்டத்தில் உறுதியாக இருக்கும் நயினார் நாகேந்திரன் :

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம் என்று ஏற்கனவே நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று திருப்பரங்குன்றம் செல்ல அவர் திட்டமிட்டிருந்த நிலையில், போலீசார் அவரது வீட்ட சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர் திருப்பரங்குன்றம் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்து அமைப்புகளுக்கு போலீஸ் கட்டுப்பாடு , திருநெல்வேலியில் தொடர்ந்து கண்காணிப்பு :

நயினார் நாகேந்திரன் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் திருநெல்வேலி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

=====================