Nainar questioned DMK government important documents of SIT Investigation have burned in karur incidents  
தமிழ்நாடு

SIT ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு? : யாரை காப்பாற்ற? நயினார் கேள்வி

சிறப்பு புலனாய்வு குழுவின் முக்கிய ஆவணங்கள்எரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், திமுக அரசு யாரை காப்பாற்ற நினைக்கிறது என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Kannan

கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் முக்​கிய ஆவணங்​கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை ஆவணங்கள் எரிப்பா?

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்படுவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசா​ரணை முடி​யும் முன்பே வழக்கு தொடர்​பான காகிதங்​களை அழிக்க அனு​மதி தந்​தது யார், விசா​ரணை நடத்​தப்​பட்ட இடத்​திலேயே பென்​-டிரைவை​யும் எரிக்​கும் அளவுக்கு அப்​படி என்ன நிர்ப்​பந்​தம் ஏற்​பட்​டது? அவசர கதி​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு நியமிக்​கப்​பட்​டதை சுட்​டிக்​காட்​டி, அதற்கு உச்ச நீதி​மன்​றம் தடை​விதித்த உடனேயே ஆவணங்​கள் அழிக்​கப்​பட்​டது ஏன்?.

யாரை காப்பாற்ற அரசு முயல்கிறது

ஆவணங்​களை அழிக்க வேண்​டும் என்று உச்சநீதி​மன்​றமோ, ஏதேனும் சட்​டமோ கூறுகிற​தா விசா​ரணை முடி​யும் முன்​னரே சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் முதல் அரசு அதி​காரி​கள் வரை ஒருதலைபட்​ச​மான கருத்​துகளை ஆர்​வ​மாக தெரி​வித்த நிலை​யில், தற்​போது ஆவணங்​கள் எரிக்​கப்​பட்​டது எதை மறைக்க, யாரை காப்​பாற்ற?

திமுக அரசு மீது சந்தேகம்

கரூர் துயரச் சம்​பவத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு திமுக அரசு முதலில் மறுத்​தது, சட்​டப்​பேரவை வளாகத்​தில் அமைச்​சர்​கள் அவசர கதி​யாக மாற்றி மாற்றி கருத்​துகளை தெரி​வித்​தது, தற்​போது ஆவணங்​கள் எரிக்​கப்​பட்​டது என, இவை அனைத்​தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்​சிப்​ப​தையே சுட்​டிக் காட்​டு​கின்​றன.

உண்மையை யாரும் மறைக்க முடியாது

உண்மை எப்​போதும் உறங்​காது. தமிழக பாஜக உறங்​க​வும் விடாது. எனவே, வழக்​கம்​போல வாய்ப்​பூட்டு அணிந்து திசை​திருப்பு நாடகங்​களில் ஈடு​ப​டா​மல், ஆவணங்​கள் எரிக்​கப்​பட்​டது தொடர்​பாக திமுக அரசு உடனடி​யாக விளக்​கம் அளிக்க வேண்​டும்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

==============