சட்டமன்ற கூட்டத்தொடர்
17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் அர்லேகர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, பின்னர் தேசியகீதம் ஒலித்தது.
அவை தொடங்கியதும், நிறைவு பெறும் போது, தேசியகீதம் பாடப்பட்டது. இதை ஆளுங்கட்சியினர் பாராட்டும் நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளன.
‘புதிய உதயம்
3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்பட்டுள்ளது என்பது ‘புதிய உதயம்’ என்றுkஃ அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
‘சரித்திர நிகழ்வு’
2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்பது ‘சரித்திர நிகழ்வு’ என்று தமிழக ஆளுநர் அர்லேகர் (Governor Arlekar) பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.
2 முறை தேசிய கீதம்
மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது நடைபெற்று இருக்கிறது.
மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து,மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
மனதுக்கு நிறைவு
ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்....
என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது” இவ்வாறு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
=============