Nayinar Nagendran questioned Chief Minister, "How many criminals are you going to shoot and arrest to save the women?” X(Twitter)
தமிழ்நாடு

“திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை” : நயினார் விளாசல்

Nainar Nagendran on DMK Government : எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள்? என, முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Kannan

திமுகவின் சாதனை இதுதான்

Nainar Nagendran on DMK Government : தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை!

கோவையில் மீண்டும் அவலம்

தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

முதலமைச்சருக்கு கேள்வி?

திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

நாடு போற்றும் நல்லாட்சியா இது?

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் திமுக அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு”! இவ்வாறு அந்த பதிவில் நயினார் நாகேந்திரன் காட்டத்துடன் விமர்சித்து இருக்கிறார்.

=======