New IRCTC Website Launched Cloud Based Train Ticket Booking 2026
ரயில் பயணிகள் எளிமையாகவும், எவ்வித தடையுமின்றியும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதள சேவையை ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் பல ஆண்டுகளாகப் பயணிகள் சந்தித்து வந்த ஆன்லைன் முன்பதிவு சிக்கல்களுக்குப் பெரிய அளவில் தீர்வு காணப்பட்டுள்ளது.
பயணிகள் சந்தித்து வந்த முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன?
பொதுவாக பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் மற்றும் தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு நேரங்களில் லட்சக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் IRCTC வலைதளத்தைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த இக்கட்டான நேரங்களில் பயணிகள் பின்வரும் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர்:
சர்வர் கோளாறுகள்: ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பயன்படுத்துவதால் சர்வர்கள் முடங்கிப்போவது.
Captcha குளறுபடிகள்: டிக்கெட் புக் செய்யும் அவசரத்தில் கேப்ச்சா குறியீடுகளைப் பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் பிழைகள்.
OTP தாமதம்: வங்கிப் பரிவர்த்தனையின் போதும், உள்நுழையும் போதும் அளவுக்கு அதிகமான OTP எண்கள் கேட்பது அல்லது OTP வரத் தாமதமாவது.
வலைதள தேக்கம்: கட்டணப் பக்கத்திற்குச் செல்லும்போது திடீரென இணையதளம் அப்படியே இயங்காமல் நின்றுவிடுவது .
இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகளால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சாதாரண மக்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.
புதிய IRCTC தளத்தில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்
பயணிகளின் இந்த நீண்ட காலப புலம்பல்களைக் கேட்ட ரயில்வே அமைச்சகம், தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தளத்தை வடிவமைத்துள்ளது.
40 ஆண்டுகால முறைக்கு குட்பை சொன்ன IRCTC
கடந்த 40 ஆண்டுகாலமாகப் பயன்பாட்டில் இருந்த பாரம்பரிய பி.ஆர்.எஸ் (PRS) டிக்கெட் முன்பதிவு முறைக்கு மாற்றாக, தற்போது நவீன கிளவுட் தொழில்நுட்ப முறை (Cloud-based system) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது மிகக் கடுமையான டிராஃபிக் நேரத்தைக் கையாளும் வகையில் சர்வர்கள் பல மடங்கு வலுப்படுத்தப்பட்டு, வலைதளத்தின் வேகம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு
புதிய கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் இனி ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் வரை எவ்வித தடையுமின்றி மிக வேகமாக பயணிகள் முன்பதிவு செய்ய முடியும்.
இனி கவலை வேண்டாம்
பண்டிகை கால முன்பதிவு, வார இறுதி நாட்கள், நீண்ட விடுமுறை நாட்கள் மற்றும் அவசரக்கால தட்கல் முன்பதிவு போன்ற உச்சக்கட்ட டிராஃபிக் நேரங்களிலும், எந்தவித தொய்வும் இல்லாமல் பயணிகள் மிக எளிதாகவும் விரைவாகவும் டிக்கெட் புக் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=====