ANI
தமிழ்நாடு

தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை : கோவை, நீலகிரியில் கனமழை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Kannan

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்று வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது என்றும், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.