TVK Vijay Assured no alliance with DMK, BJP  https://x.com/Tvk_ITWING_
தமிழ்நாடு

திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி : விஜய் அதிரடி

TVK Vijay on Parandur Airport : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்று, நடிகர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Kannan

TVK Meeting in Panaiyur : சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கொள்கை எதிரி திமுக :

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்(TVK Vijay Speech), “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தமிழக வெற்றிக் கழகம் மிகவும் உறுதியாக இருக்கிறது.

குழைந்து கூட்டணி அமைக்க மாட்டோம் :

பெரியார், அண்ணாவின் மதிப்பை குலைத்து தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கூடிக் குழைந்து கூட்டணிக்கு போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ கிடையாது. தவெக எப்போதும் விவசாயிகள் பக்கம்தான் நிற்கும்.

விவசாயி்களை முதல்வர் சந்திக்க வேண்டும் :

பரந்தூர் விவசாயிகள் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, விமான நிலையம் வராது என்ற உறுதியை அளிக்க வேண்டும். இதை செய்யாமல் கடந்து போக நினைத்தால், பரந்தூர் மக்களை அழைத்துக் கொண்டு நானே தலைமைச் செயலகம் வந்து உங்களை சந்தித்து முறையிடுவேன்.

நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. விமான நிலையம்(Parandur Airport) வேண்டாம் எனக் கூறவில்லை. தேர்வு செய்த இடம்தான் தவறு என்கிறோம்.

தவெக தலைமையில் தான் கூட்டணி :

கூட்டணி என்றாலும் எங்கள் தலைமையில் அமையும் கூட்டணி, எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாகத் தான் இருக்கும்.

அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்.” என்று அவர் பேசினார்.

===========