No contest in Ranipet: DMK candidate Vinod Gandhi makes sudden announcement; decides to hand over to father  google
தமிழ்நாடு

ராணிப்பேட்டை : தந்தைக்காக விட்டுக் கொடுத்த வினோத் காந்தி : அமைச்சர் ஆர். காந்தி மீண்டும் போட்டி!

DMK Candidate Vinod Gandhi on Nomination : திமுக சார்பாக ராணிப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்

Rohini

வேட்பாளர் பதவியில் இருந்து பின்வாங்கல்

DMK Candidate Vinod Gandhi on Nomination : திமுக சார்பாக ராணிப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காந்தி மகன் வினோத் காந்தி அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளார் .

ராணிப்பேட்டை தொகுதி மீண்டும் காந்தி போட்டி

தனது தந்தை அமைச்சர் காந்திக்காக, தான் ராணிபேட்டை தொகுதி வேட்பாளர் போட்டியில் ஈடுபட போவதில்லை என்றும் , பின்வாங்கியுள்ளார். ராணிப்பேட்டையில் மீண்டும் தனது தந்தையார் காந்தியே போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் அறிவிப்பில் மறுக்கப்பட்ட சீட்

திமுகவின் முன்னாள் சிட்டிங் அமைச்சர்களான காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி ஆகிய மூவருக்கும் திமுகவில் சீட் மறுக்கப்பட்டிருந்தது ,இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதன்படி ராணிப்பேட்டை தொகுதியில் காந்தி பதிலாக அவரது மகன் வினோத் காந்தி போட்டியிடுவார் என்று அறிவித்திருந்தது திமுக.

முடிவில் திருப்பம்

தற்போது ராணிப்பேட்டை தொகுதியில் தான் போட்டியிட போவதில்லை என்றும் , தனக்கு சீட் அறிவிக்கப்படாததால், காந்தி அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, தனது தந்தைக்காக வினோத் காந்தி ராணிப்பேட்டையில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இது குறித்து வினோத் காந்தியின் முகநூல் பதிவு

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து என் மேல் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.

கழகத் தலைவருக்கும்,என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன். என்றும் பதிவிட்டுள்ளார்

திமுகவில் ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

இதுகுறித்து திமுக மேலிடத்தில் இந்தத் அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல் செய்த காந்தி

இதற்கிடையில் இன்று வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து , வினோத் காந்தியின் தந்தை அமைச்சர் ஆர். காந்தி ராணிப்பேட்டை தொகுதியில் வேட்பு,அணு தாக்கல் செய்தார்