"No matter what project is introduced, agricultural land has to be acquired" – Minister Sengottaiyan source:ai
தமிழ்நாடு

"எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைத்தான் எடுத்தாக வேண்டும்" - அமைச்சர் செங்கோட்டையன்!

ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்தார்.

Kavitha prasanna

"No matter what project is introduced, agricultural land has to be acquired" – Minister Sengottaiyan!

ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாகச் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டியின் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் இணையத்தில் விவாதமாகியுள்ளது.

பரந்தூர் திட்டம் ரத்து மற்றும் ஓசூர் விமான நிலையத் திட்டம்

சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதல்வர் விஜய் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரந்தூருக்குப் பதிலாக ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்தார்.

பேரவையில் அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி, "ஓசூரில் விவசாய நிலங்களை எடுத்து விமான நிலையம் கட்டக் கூடாது.

பரந்தூர் போல ஓசூர் விவசாயிகளின் குரலையும் அரசு கேட்க வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்று பேசினார்.

அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி

இதற்குப் பதிலளித்துப் பேசிய பேரவை முன்னவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், "எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைத்தான் எடுத்தாக வேண்டும்; வேறு வழி கிடையாது.

அதேநேரத்தில் பொருளாதாரம் வளர்வதற்கு ஓசூரில் விமான நிலையம் கொண்டுவந்தால் பெரும் வளர்ச்சி உருவாகும்" என்று தெரிவித்தார்.

இணையத்தில் விவாதம்

விவசாயிகளுக்கு ஆதரவாகத் த.வெ.க. அரசு இருக்கும் என்று முதல்வரும் அமைச்சர்களும் கூறிவரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: "ஆதவ் அர்ஜுனா இல்லாததால் சீக்கிரம் முடியும் என நினைத்தேன்" - சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

=====