NTK Seeman Criticize TVK Vijay Manadu Speech 
தமிழ்நாடு

"Uncle, Uncle" அணில் ஏன் கத்துகிறது? : விஜய்யை கலாய்த்த சீமான்

NTK Seeman Criticize TVK Vijay Manadu Speech : போன மாநாட்டில் சிஎம் சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார் என்று, விஜய்யை சீமான் விமர்சித்து இருக்கிறார்.

Kannan

NTK Seeman Criticize TVK Vijay Manadu Speech : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை சிஎம் சார் என்று அழைத்து விமர்சித்து இருந்தார் நடிகர் விஜய். ஆனால், மதுரை மாநாட்டில் அங்கிள் என விளித்து இருந்தார்.

’ஜங்கிள், ஜங்கிள்’ என்று கத்த வேண்டும் :

இதுபற்றி மதுரையில் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ”அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள், ஜங்கிள் தான் கத்த வேண்டும் என்று கூறினார்.

கடந்த மாநாட்டில் சிஎம் சாராக இருந்த முதல்வர், இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார், அதற்கு பின்னணி என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிமுக விவகாரம், விஜய்க்கு பதிலடி :

அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை நான்கரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது விஜய் ஏன் கேட்கவில்லை?. இப்போதுதான் கண்களுக்கு அதிமுக தொண்டர்கள் தெரிகிறார்களா?.

ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் ஒழியும் :

நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் லஞ்சமும் ஒரு நிமிடத்தில் ஒழியும். பதவிக்காகவோ, கோடி, கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலோ நான் அரசியலுக்கு வரவில்லை.

2026ல் நாம் தமிழர் மாநாடு :

அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சியின்(NTK Manadu Date) மாநாட்டை நடத்துகிறேன். அப்போது வரும் கூட்டத்தை பாருங்கள். ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும்,

ஒரு மாநாட்டில் எப்படி உரையாற்ற வேண்டும். எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்பதை மாநாட்டிற்கு வந்து பாருங்கள்.

மேலும் படிக்க : வைகோ,விஜயகாந்த் தவறை செய்ய மாட்டேன்: சீமான் திட்டவட்டம்

தேர்தலுக்காகவே விநாயகர் சதுர்த்தி வாழ்த்து :

நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள்(Vinayagar Chaturthi 2025 Wishes) சொல்லி இருப்பது பற்றி கேள்விக்கு பதிலளிக்க அவர், அப்படி என்றால், என்று அர்த்தம். விநாயகர் நம்ம ஆளுதானே வாழ்த்திட்டு போக வேண்டியது தானே? அதில் ஒன்றும் இல்லையே? தமிழனோட ஆட்சி காலத்தில் அவர் தான் தெய்வமாக இருந்தார்” இவ்வாறு சீமான்(Seeman) பதிலளித்தார்.

=============