NTK Chief Seeman Speech About NTK Alliance 
தமிழ்நாடு

Alliance - வைகோ,விஜயகாந்த் தவறை செய்ய மாட்டேன்: சீமான் திட்டவட்டம்

Seeman Speech About NTK Alliance : ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன் என்று, சீமான் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

2026 - முக்கியமான தேர்தல் :

NTK Chief Seeman Speech About NTK Alliance : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் களம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தேர்தலை சந்திக்கவுள்ளது. இதுவரை நாம் பார்க்காத தனித்துவமான தேர்தலாக வருகிற சட்டமன்ற தேர்தல் இருக்கும்.

திமுக மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். காவல்துறையின் கைகள் தான் ஓங்கியிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நிர்வாகத்தில் பெரும் குளறுபடி :

சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளது, நிர்வாக ரீதியாகவும் பல குளறுபடிகள் உள்ளன, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். கூட்டணி பலமாக இருந்தாலும்,நல்லாட்சி தராவிட்டால், யார் இருந்தாலும் வீண் தான்.

மாநாட்டால் பிரச்சினைகள் தீராது :

தமிழக வெற்றிக் கழகத்தை விஜய்(TVK Vijay) உருவாக்கி சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறார். ஆனால் அவர் களத்திற்கு இன்னும் வரவில்லை. மக்கள் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. மாநாடு(TVK Manadu) நடத்தினால், எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடாது.

முன்னோர் செய்த தவறை செய்ய மாட்டேன் :

விஜயும், சீமானும் கூட்டணி(NTK TVK Alliance) அமைக்க போகிறார்கள் என்று பேசுகிறார்கள். ஆனால், யாருடனும் கூட்டணிக்கு வைக்க மாட்டேன்.

மேலும் படிக்க : ஈழத் தமிழர் விவகாரம்: மன்னிப்பு கேட்ட ’கிங்டம்’ தயாரிப்பு நிறுவனம்

சாம்பலானாலும் தனிவழிதான்

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நம்பிக்கையை பெற்றவன். எம் முன்னோர் செய்த தவறை செய்யபோவதுமில்லை, மபொசி, ஆதித்தனார், நிறுவனர் ராமதாஸ், விஜயகாந்த், திருமாவளவன், வைகோ என எம் முன்னவர் கூட்டணி என்ற பெயரில் செய்த தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். செத்து சாம்பலானாலும் தனியாகத்தான் சாவோம்” என சீமான்(Seeman Speech About NTK Alliance) திட்டவட்டமாக கூறினார்.

=============