Number of MPs in Tamil Nadu likely to increase from 39 to 59; Former BJP state president Annamalai  google
தமிழ்நாடு

தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை உயரும்! : பிரதமருக்கு எச்சரிக்கை விடுப்பது சரியல்ல : முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Rohini

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து , இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிறப்புக் கூட்டம் ஏப்.16

இதையொட்டி, மகளிர் இடஒதுக்கீடுக்கான நடப்பு பட்ஜெட் கூட்டம் ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக 2023-இல் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது குறிபிடத்தக்கது.

மகளிர் இடஒதுக்கீடுக்கான திருத்த சட்டம்

ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை 2029-ஆம் ஆண்டே அமல்படுத்துவதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுகுறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது

நாடளுமன்றத்தில் பெண்களுக்குக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது குறித்து அண்ணாமலை கூறியுள்ளதாவது

மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்திருந்தால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 தொகுதிகளில் இருந்து 31 தொகுதிகளாக குறைந்திருக்கும். தென் மாநிலங்கள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் தொகுதி மறுவரையறை செய்கிறார்

தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு செய்யவில்லை, தொகுதிகளை அதிகப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளை 50% உயர்த்த உள்ளதாக முதற்கட்ட தகவலாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு

இது குறித்து அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் நம்முடைய தலைவர்கள் தெரிவிப்பார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

முதல்வர் ஸ்டாலின் பதிவுக்கு எதிர் விளக்கம்

கேரள மாநிலத்தில் 20-லிருந்து 30 வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது.மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல், அனைவரையும் ஒரு மனதோடு, ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் மத்திய அரசு எடுத்துச் செல்ல நினைக்கிறது.

எதற்காக பொய்யைக் கூறி அச்சத்தையும் பயத்தையும் முதல்வர் உருவாக்குகிறார்" என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு பேசியிருந்த தொகுதி மறுவரையரை வீடியோ குறித்த பதிவுக்கு பதில் விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை.

-=============