O. Panneerselvam met CM Stalin, his supporter MLA Ayyappan, saying that Stalin will become Chief Minister again google
தமிழ்நாடு

”தை முடிந்து வழி பிறந்ததா!” திமுக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம்? : முதல்வரை புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ் ஆதரவு MLA...

முதல்வர் ஸ்டாலினை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்த நிலையில், சட்டசபையில் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று பேசி, கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார்.

Kannan

தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்

O. Panneerselvam met Chief Minister Stalin, his supporter in the Assembly, MLA Ayyappan, saying that Stalin will become the Chief Minister again : தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

ஓ. பன்னீர் செல்வம் ( ஓபிஎஸ் )

2024 மக்களவை தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் பாஜக தலைமையிலான கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

தனித்து நிற்கும் ஓ. பன்னீர் செல்வம்

ஓ. பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பதில்லை என்பதில், எடப்பாடி பழனிசாமி உறுதியாக நிற்கிறார். பாஜக மேற்கொண்ட முயற்சிகளும் பலன் தரவில்லை. அவரது ஆதாரவாளர்கள் பலர் வேறு கட்சிகளுக்கு தாவி விட்டார்கள். இந்நிலையில் தான் தற்போது ஓ பன்னீர் செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார்.

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியை தொடங்கி விட்டார். எம்ஜிஆர் அதிமுமக என்ற கட்சியை அவர் தொடங்கி உள்ளார்.

முதல்வரை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை, ஓ பன்னீர் செல்வம் இன்று திடீரென்று சந்தித்து பழக்கூடை வழங்கினார். நேற்று தான் பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் பழக்கூடையுடன் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஓபிஎஸ் அவரது மகன், முன்னாள் எம்பி ரவீந்திரநாத் அப்போது உடன் இருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இந்த சந்திப்பின் போது இருந்தார். அதன்பிறகு ஸ்டாலினும், ஓ பன்னீர் செல்வமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திமுக கூட்டணியில் ஓபிஎஸ்!

இந்த சந்திப்புக்கு பிறகு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

முதல்வரை புகழ்ந்த ஓபிஎஸ் எம்எல்ஏ ஐயப்பன்

இதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது ஆதரவாளரும், எம்எல்ஏவுமான ஐயப்பன், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

காலை உணவு திட்டத்துக்காக தமிழ் சமுதாயம் இருக்கும் வரை முதலமைச்சரை பாராட்டிக் கொண்டிருப்பார்கள் என்று ஐயப்பன் புகழ்ந்தார்.

எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன், “ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்தது.. வாழ்நாளை வீணாக்க முடியாது” என்று கடுப்புடன் பேட்டி அளித்தார்.

திமுக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் சேர்ந்தால், எந்த தொகுதியில் போட்டியிடுவார், உதய சூரியன் சின்னத்தில் நிற்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

==============